Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக பதிவான இரு கட்சிகள்; எது ரஜினி கட்சி? – தொண்டர்கள் யூகம்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:48 IST)
தமிழகத்தில் புதிதாக இரண்டு அரசியல் கட்சிகள் பெயர் பதிவாகியுள்ள நிலையில் அதில் ரஜினிகாந்தின் கட்சி பெயர் உள்ளதாக என தொண்டர்கள் யூகித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். எனினும் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இரு புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்கு விண்ணத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் ராஜ்ய கட்சி என்ற அந்த இரு கட்சிகள் குறித்து ஆட்சேபணை இருந்தால் ஜனவரி 7க்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

விரைவில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி பெயரை அறிவிக்க உள்ள நிலையில் இந்த இரண்டில் ஒன்று ரஜினியின் கட்சி பெயராக இருக்கலாம் என்ற யூகம் எழுந்துள்ளது. எது ரஜினி கட்சி பெயராக இருக்கும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments