Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்தவர் மயங்கி விழுந்து மரணம்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (19:55 IST)
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்தவர் மயங்கி விழுந்து மரணம்!
தமிழகம் உள்ள உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கனவே ஒரு கட்ட தேர்தல் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களிலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக குவாலியரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் மத்திய பிரதேச சிறப்பு ஆயுதப்படை சிறப்பு ஆயுதப்படை இன்று வந்தனர். இதில் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவரும் வந்திருந்த நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார் 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜ்குமார் மூளையில் திடீரென ரத்த கசிவு ஏற்பட்டு அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்
 
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்தவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments