Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக ஏற்படும்: ரஜினிகாந்த் பேச்சு

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (21:07 IST)
தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக ஏற்படும்: ரஜினிகாந்த் பேச்சு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து மக்களிடம் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும், அந்த புரட்சி வெடிக்கும் என்று தான் நம்புவதாகவும் அந்த சமயத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். அப்படியே அரசியலுக்கு வந்தாலும் தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும் கட்சி தலைவராக இருந்து வழி நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்கியா சேனல் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
 
நான் ஒரு புள்ளி போட்டேன். அந்த புள்ளி இப்போது சூழலாக மாறி உள்ளது. அதை அலையாக மாற்ற இந்த ரஜினிகாந்த் வருவான். ரஜினி ரசிகர்களும் வருவார்கள். தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை சுனாமியாக மாறும் என்று கூறினார் 
 
மேலும் தேர்தல் அரசியல் சுனாமி ஏற்படுத்துவது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் மக்களாகிய நீங்கள் தான் ஆண்டவன் என்றும் அந்த அற்புதம் அதிசயம் நிச்சயம் நிகழும் என்றும் கூறினார். மேலும் எல்லார் பேச்சையும் கேட்கிறவனும் உருப்பட மாட்டான். யார் பேச்சையும் கேட்காதவனும் உருப்பட மாட்டான்’ என்று ரஜினிகாந்த் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments