யாருடன் கூட்டணி: அமெரிக்கா செல்லுமுன் ரஜினிகாந்த் கருத்து

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (22:07 IST)
கமல்ஹாசன் இன்று தனது கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும் தமிழகத்தின் மரபணுவை மதிக்காத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் இன்று அமெரிக்கா செல்லவுள்ள ரஜினிகாந்த், அவர்களும் கூட்டணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி பற்றி பார்க்கலாம் என்றும்,, தேர்தல் வரும்போது போட்டியிடுவது குறித்து சொல்வதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் வரும் புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாக, மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டுவதாகவும், ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்

மேலும் தனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளது உண்மைதான் என்றும் கூறியுள்ள ரஜினிகாந்த், என்னுடைய பெயரில் வெறொருவர் தொலைக்காட்சி சேனல் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் வந்ததால் முன் கூட்டியே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்' என்றும் கூறினார்.

மேலும் ‘பேட்ட’ திரைப்படம் நான் எதிர்பார்த்தது போல் வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments