Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்?

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (09:00 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் எப்பொழுது நிறுவப்பட உள்ளது என பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தாமதத்திற்கு சென்னை மாநகராட்சி சம்மதம் தெரிவிக்காததே என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் சிலையை நிறுவ நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது. 
 
அதன்படி கருணாநிதியின் திரூஉருவ சிலை, வரும் டிசம்பர் 16ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிலை திறப்பு விழாவிற்கு வரும் சோனியா காந்தி, கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments