Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி: முக்கிய அறிவிப்பா?

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (08:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார் என்பதை பார்த்தோம். இந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் பேட்டி அளித்த போது தான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட செயலாளர்களுக்கு திருப்தியாக இருந்ததாகவும் ஆனால் தனக்கு மட்டுமே ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்றும் கூறினார் 
 
ரஜினிக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்ன? என்பது குறித்து கடந்த ஒரு வாரமாக ஊடகங்கள் விவாதம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பில் ஒரு சில முக்கிய முடிவுகளை ரஜினிகாந்தை அறிவிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் நாளை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளையும் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும் என்பதும் அதன் பின்னர் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments