Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த்?: என்ன காரணம்?

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த்?: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (10:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதனையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்கு தான் அமெரிக்கா சென்றார் என தகவல்கள் வெளியானது.


 
 
ஆனால் இந்த தகவலை ரஜினிகாந்த் தரப்பு மறுத்துள்ளது. அவர் திரைப்படம் சம்மந்தமாகவே அமெரிக்கா சென்றார் என கூறப்பட்டது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். பின்னர் ஷங்கர் இயக்கும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனையடுத்து கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்திலும் அடுத்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
 
இந்த நிலையில் தான் ரஜினி அமெரிக்கா சென்றார், அவர் சிகிச்சைக்காக தான் அங்கு சென்றார் என முன்னர் தகவல் வெளியானது. தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும், இந்த பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் இருப்பதாக கூறப்படுகிறது.

 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments