டிசம்பர் 31ல் அறிவிப்பு, ஜனவரியில் கட்சி துவக்கம்: ரஜினிகாந்த் அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார் 
 
டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் ஜனவரியில் கட்சி துவக்கம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார் என்பதும், சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவர் தனது அரசியல் கட்சியை அறிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும்; இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments