யோகி காலில் விழுந்த ரஜினி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:06 IST)
இமயமலை பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆனால் படம் வெளியாகும் முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் புறப்பட்டார்.

அவ்வாறாக ஆன்மீக பயணம் செய்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த் நேற்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து ரஜினி ஆசிப்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தை விட வயது குறைந்தவர் யோகி ஆதித்யநாத். அப்படியிருக்க அவர் காலில் ரஜினி விழுந்தது அவரது ரசிகர்களுக்கே ஏற்புடையதாக இல்லை.

இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். மேலும் காலா படத்தில் காலில் விழுவது தவறு என பேசிவிட்டு இப்போது அவரே ஒருவர் காலில் விழுகிறாரே என விமர்சனங்களும் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் பலர் இதை கிண்டல் செய்து மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ரஜினிக்கு ஆதரவாக பேசும் சிலர் யோகி ஆதித்யநாத் ஒரு மாநிலத்தின் முதல்வர் மட்டும் அல்ல. அவர் ஒரு ஆன்மீக துறவி. அதனாலேயே ரஜினி அவ்வாறாக காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்றும் கூறி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments