Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவாகரத்துக்கு சென்ற ரஜினி மகள் விவகாரம்: திரையுலகினர் அதிர்ச்சி!

விவாகரத்துக்கு சென்ற ரஜினி மகள் விவகாரம்: திரையுலகினர் அதிர்ச்சி!

விவாகரத்துக்கு சென்ற ரஜினி மகள் விவகாரம்: திரையுலகினர் அதிர்ச்சி!
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (14:53 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள் உள்ளனர். ஐஸ்வர்யா முதல் மகள், சௌந்தர்யா இரண்டாவது மகள். முதல் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.


 
 
முதல் மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் தனுஷ் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்கும் முன்னர் இரண்டாவது மகள் சந்தர்யா பற்றி அதிகாரப்பூரவமற்ற தகவல்கள் வருகின்றன.
 
2010-இல் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா, கடந்த நான்கு மாதங்களாக சென்னை சேத்துப்பட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
 
இந்த செய்தி குறித்து ரஜினி குடும்பத்திடம் இருந்து எந்தவித அறிக்கையும் வரவில்லை. அதே நேரம் இதற்கு மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் ஜீயோ ஜிகாஃபைபர்: 600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே!!!