’ரஜினி மக்கள் மன்றம் ’ செய்த வேலை : அரசியல் ட்ரைலரா இது ? ஆடிப்போன முக்கிய கட்சிகள் ..

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (19:50 IST)
தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் பிறந்தநாளின் போது தனது அரசியல் வருகையை உறுதிசெய்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். 
இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார்  என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். 
 
இந்நிலையில் அவரது துரிதமான நடவடிக்கைகள் பலவும் ரஜினி அரசியல் நகர்வுக்கான காய்நகர்த்துவதாகவே பார்க்கப்பட்டது.
 
இதற்கிடையில் ரஜினி தன் ரசிகர்களை மகிழ்விக்க 2.0, பேட்ட ஆகிய படங்களைக் கொடுத்தார்.  தற்போது முருகதாற் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
.
இந்நிலையில் தற்பொழுது கோடி வெயில் கொளுத்திவருவதால் மக்களின் தாகம் தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.
 
வட சென்னை, நாகை, கிருஷ்ணகிரியிலும் பொதுமக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.
கடலூரில் நாளொன்றுக்கு 9 லாரி தண்ணீர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.
 
மக்கள் இந்த தண்ணீரை உற்சாகத்துடன் மகிழ்ச்சியாகவும் பிடித்துச் சென்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ரஜினியின் வேகத்தைப் பார்த்து மலைத்துப்போயுள்ளதாத பொதுநோக்கர்கள் கருதுகிறார்கள்.

முன்னதாக பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினி, தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments