Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் ரஜினி போட்டியா? பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (08:55 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் உளவுத்துறை அறிக்கையின்படி அவருடைய ஆட்சி தான் அடுத்த ஆட்சி என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் இருந்த எம்எல்ஏக்கள் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் இந்த இரண்டு தொகுதிக்கும் விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது
 
இந்த நிலையில் எம்ஜிஆர் பாணியில் பொதுத்தேர்தலை சந்திக்கும் முன் இடைத் தேர்தலை சந்தித்து மக்களின் செல்வாக்கை அறிய ரஜினிகாந்த் திட்டமிட்டிருப்பதாகவும் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய இடைத்தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்து இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் இன்றைய கூட்டத்திற்கு பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் குடியாத்தம் அல்லது திருவொற்றியூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் ரஜினியே போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை அவர் போட்டியிடவில்லை என்றால் அவருக்கு நெருக்கமான இரண்டு பேர் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது ரஜினி அரசியல் களத்தில் இறங்க தொடங்கும் நேரம் நெருங்கி விட்டதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments