Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவேந்திரா மண்டபத்தை மருத்துவமனையாக்க முன்வந்த ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (17:18 IST)
கொரோனா சிகிச்சைப் பெற தனது கல்யாண மண்டபத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 738 ஆக உள்ளது. இதுவரை இந்த வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.
 
இதையடுத்து கமல் தனது வீட்டையும், விஜயகாந்த் தனது கட்சி அலுவலகம் மற்றும் கல்லூரியையும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தையும் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டிருந்ததாம். 
 
எனவே, அரசு அதிகாரிகள் வந்து இடத்தை பார்வையிட்டு சென்றதாகவும், தற்போது இதற்கு தேவை இல்லை, தேவை எனில் அரசு இதை பரிசீலுக்கும் என கூறி விட்டு சென்றனராம். இதற்கு முன்னர் சென்னையில் வெள்ளம் வந்த போது ரஜினி தனது மண்டபத்தில் மக்களை தங்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments