மதுரை ஆவினில் முறைகேடு; ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா? – லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (09:25 IST)
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் ஆவின் முறைகேட்டில் ஈடுபட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.

இந்நிலையில் மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மோசடியில் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments