சப்பாணி குழந்தை கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும்: கமலை வம்பிழுத்த அமைச்சர்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:15 IST)
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் மக்கள் நீது மய்யம் கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அவர் பின்வருமாறு பேசினார், கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். 
 
கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்ஜிஆர் மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். 
தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அதிமுகவும், திமுகவும்தான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என பேசியுள்ளார். 
 
கமலை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments