Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழை: வானிலை முன்னெச்சரிக்கை..!

Siva
திங்கள், 4 நவம்பர் 2024 (07:24 IST)
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை எடுத்துள்ளது, இதனால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்பி கொண்டிருக்கும் நிலையில், இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையை முன்னிட்டு மேற்கண்ட 17 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்: அமலாக்கத்துறை அதிரடி..!

ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு: தவெகவின் 26 தீர்மானங்கள்..!

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தினாரா அமைச்சர் சுரேஷ் கோபி? காவல்துறை வழக்குப்பதிவு..!

ஹிஜாப் பிரச்சினை; ட்ரெஸ்ஸே போடாமல் கல்லூரிக்குள் நடமாடிய மாணவி!

விஜய் தன் மகனை பொளந்ததை போல.. சீமான் விஜய்யை பொளக்கிறார்! - சாட்டை துரைமுருகன் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments