Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 5 மே 2014 (15:28 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து குறைந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
 
குறைந்த தாழ்வு நிலையானது தற்போது கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும். சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
 
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 7 செ.மீ., இரணியலில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Show comments