Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கும் மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (14:59 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தற்போது புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை இந்த மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 9ம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments