Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி வீட்டிற்குள் வெள்ளம்: தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

கருணாநிதி வீட்டிற்குள் வெள்ளம்: தொண்டர்கள் கடும் அதிர்ச்சி
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (04:06 IST)
தொடர் கனமழை காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் வீடு சென்னையில் கோபாலபுரத்தில் உள்ளது. சென்னை முழுதுவதும் வெளுத்து வாங்கும் மழை இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லை.
 
இதனால், இந்த பகுதியில் வெள்ளம் அதிகரித்தது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. ஆங்காங்கே வெள்ள நீர் அப்படியே நின்றது. இதை அகற்ற அவரது வீட்டில் உள்ளவர்கள் முயன்றனர்.
 
இந்த தகவல் அறிந்த தொண்டர்கள் கருணாநிதி வீட்டிற்கு உதவ சென்றனர். ஆனால் அவர்கள் உதவியை மறுத்த கருணாநிதி ஏழை, எளிய மக்களுக்கு சென்று உதவ அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். 

Share this Story:

Follow Webdunia tamil