தமிழகத்தில் இன்றிரவு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran
சனி, 10 ஆகஸ்ட் 2024 (15:40 IST)
தமிழகத்தில் இன்று மாலை அல்லது இரவில் 22 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக நேற்று இரவு திடீரென புதுவையில் கனமழை பெய்ததை அடுத்து வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாகவும் அங்கு மீட்பு நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 22 மாவட்டங்கள் பின் வருவன.
 
திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், கள்ளகுறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, பட்டுகோட்டை, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments