Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Mahendran
சனி, 13 ஜூலை 2024 (08:05 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் மும்பை உள்பட வட மாநிலங்களில் உள்ள சில நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை உள்பட நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்த நிலையில் இன்று சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கீழ்கண்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த மாவட்டங்களின் பெயர்கள் இதோ:
 
1. வேலூர்
2.  திருப்பத்தூர்
3.  ராணிப்பேட்டை
4.  திருவள்ளூர்
5.  சென்னை
6.  செங்கல்பட்டு
7.  காஞ்சிபுரம்
8. திருவண்ணாமலை
9. விழுப்புரம்
10.  தேனி
11.  கோவை
12.  நீலகிரி 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments