Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

5 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (07:45 IST)
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் கிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 
 
மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நாளை 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் 17ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பறக்கும் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்.. சக பயணிகள் அதிர்ச்சி..!

கல் உடைக்கும் தொழிலாளி பலியான வழக்கு: திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து..!

சந்தானபாரதி புகைப்படம் இடம்பெற்றிருந்தது திமுகவின் வேலை: அண்ணாமலை

வரும் ஞாயிறன்று காலை முதல் மாலை வரை புறநகர் ரயில் சேவை ரத்து.. என்ன காரணம்?

நீ என்ன பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? தொலைச்சிடுவேன் உன்ன!? - ஓபன் ஸ்டேஜில் மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments