Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களுக்கு சூட்டைத் தணிக்கும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்..? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
வெள்ளி, 11 ஜூலை 2025 (13:37 IST)

மேற்கு திசை காற்று திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

13 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

15 முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மழை பெய்யும் பகுதிகள் தவிர சில பகுதிகளில் இன்று முதல் 13ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவை அடக்கதான் இந்தியாவுக்கு வரி விதித்தோம்!? - டொனால்டு ட்ரம்ப்!

புலியாக பாயும் கர்நாடகமும், பூனையாய் பதுங்கும் திமுக அரசும்.. அன்புமணி கண்டனம்..!

தூய்மை பணியை தனியாருக்கு தர தடை இல்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

திமுகவில் இணைகிறாரா நடிகர் சூர்யா? விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுவாரா?

அப்பா.. உங்கள் கனவை நிறைவேற்றுவேன்.. ராஜீவ் காந்தி பிறந்த நாளில் ராகுல் காந்தி உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments