Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கடலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கடலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை
, ஞாயிறு, 29 நவம்பர் 2015 (11:02 IST)
கனமழைக்கு வய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளதையடுத்து, கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.


 

 
கடலூரில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் அவரச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் மின்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
கனழை பெய்தால் மக்களையும் உடைமைகளையும் பாதுக்கும் வகையில், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தீயணைப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டது.
 
தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடினால், மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பிவிட காவல்துறை தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 
நீர்நிலைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும், புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 
என்எல்சி நிர்வாகம் அத்துடன்முன்னறிவிப்பின்றி தண்ணீரை வெளியேற்றக் கூடாது என்று ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil