Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (11:32 IST)
தமிழகத்தில் மழை காலம் மற்றும் குளிர்கால முடிவடைந்து கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று இரண்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இனி அவ்வப்போது கோடை மழை மட்டுமே இருக்கும் என்றும் நாளடைவில் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments