இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (10:52 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. டிசம்பர் தொடக்கத்தில் உருவான மிக்ஜாம் புயலாலும், தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையாலும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அதன்பின்னர் அதை தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. பல பகுதிகளிலும் மிதமான அளவிலேயே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சில இடங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments