Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (07:53 IST)
சென்னையின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது 
 
சென்னை நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், தி நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாகவே வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் உள்ள குடிநீர் ஆதாரமான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளதை அடுத்து இந்த ஆண்டு குடிநீர் கஷ்டம் வராது என்பதால் சென்னை மக்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments