Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்பு- செல்வக்குமார் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (13:32 IST)
புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர். இவர் சமீபத்தில் தமிழகத்தின் அடுத்த மழைக் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ‘தெற்கு அந்தமான் - சுமத்திரா தீவு இடையே டிசம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கிறது. ஏற்கெனவே நிலவி வரும் காற்றழுத்த சுழற்சியுடன் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை  இணைந்து வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது, 15 அல்லது 16-ம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி வரும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமையடைந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. வட தமிழகத்தை நோக்கி வந்தால் சிறு புயலாக மட்டுமே இருக்கும்.. தமிழகத்துக்கு அதிகமான மழை தரும் நிகழ்வாகவே இது அமைய வாய்ப்புள்ளது. பயப்படும் அளவிற்கு சேதம் விளைவிக்காது. ஒருவேளை தெற்கு ஆந்திராவை நோக்கிச் சென்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோரா மாவட்டங்களில் மிக கனமழையை கொடுக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தமிழக கடல் பகுதியில் நிலவும் வெப்பத்தை பொறுத்து நிகழ்வுகள் அமையும். இன்னும் 9 நாட்கள் இருப்பதால் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தடுத்த நாட்களில் இதன் நகர்வுகள் முழுமையாக தெரிய வரும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments