இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (16:40 IST)
தமிழகத்தில் அடுத்த சில மணிநேரங்களில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியின் ஒருசில பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments