Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ள பாதிப்பு: கடலூரில் இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (07:23 IST)
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது.


 
 
மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.என்.எஸ்.பிரசாத் தலைமையிலான மத்திய ஆய்புக் குழு நேற்று சென்னையிலுள்ள தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
 
இந்த மழை, வெள்ள பாதிப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று இந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
 இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
 
நேற்று இந்த மத்திய குழுவை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "மத்திய குழு இந்த மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் ஏற்பட்ட சேதங்களை ஆழ்ந்து மதிப்பீட்டு மத்திய அரசாங்கம் எந்த வித தாமதம் இல்லாமல் மத்திய நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments