Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (09:00 IST)
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா பாசன பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தென்காசி, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வரை மழைப்பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

Edit by prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி சுற்றுலா: இன்று முதல் 5 இடங்களில் இ-பாஸ் சோதனை! - சுற்றுலா பயணிகள் நிம்மதி!

கேள்வி தவறு என்பதால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வுத்துறை அறிவிப்பு..!

இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments