இன்றிரவு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
புதன், 24 ஜூலை 2024 (16:29 IST)
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழக முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்றைய சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பூர், தேனி , திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. ஸ்வீட் வாங்க வந்த ராகுல் காந்திக்கு கடைக்காரர் அட்வைஸ்..!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வேன்!கனடா பிரதமர் மார்க் கார்னி

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 20 செமீ வரை மழை பெய்யலாம்: வானிலை எச்சரிக்கை..!

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments