Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:51 IST)
தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைத்தளத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன? விளக்கம் அளிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

அதானி விவகாரத்தில் திமுக அரசுக்கும் பங்கு உண்டு: பாஜக பதிலடி..!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை இதோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments