Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Mahendran
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (16:55 IST)
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, சென்னை உட்பட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தெற்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
 
இந்த சூழ்நிலையின் காரணமாக, ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments