Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்வளவு தொகுதி கேட்கலாம்? எவ்வளவு குடுப்பாங்க? – தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (08:51 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இன்று ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை சமீபத்தில் உறுதி செய்தது. இந்நிலையில் எதிர்கட்சியான திமுக, காங்கிரஸுடனான கூட்டணி பேச்சு வார்த்தை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ராகுல் காந்தி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸின் வலு எவ்வளவு உள்ளது? திமுகவிடம் எவ்வளவு தொகுதிகள் வரை பெற முடியும்? என்பது குறித்தும், கூட்டணி வெற்றியடைய செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ராகுல் காந்தி பேச உள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக திமுகவிடம் தொகுதிகளுக்காக பேரம் பேச போவதில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments