ரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பிக்கலாமே! ராதாரவி யோசனை

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (12:44 IST)
நடிகர் கமல்ஹாசன் இம்மாதம் 21ஆம் தேதி இராமநாதபுரத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் வெகுவிரைவில் ரஜினியிடம் இருந்தும் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதால் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் ரஜினி கட்சியின் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி, கமல் அரசியலில் களம் புகுவது குறித்து சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி கூறியபோது, 'ரஜினி, கமல் அரசியல் களத்திற்கு வரட்டும். வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும், ரஜினி  தமிழகத்தில் கட்சி ஆரம்பிப்பதை விட கர்நாடகாவில் அரசியல் செய்யட்டும் என்றும் தமிழகத்தை தமிழர்கள் ஆளட்டும் என்றும் கூறியுள்ளார்.

ராதாரவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஒருசிலர் இந்த கருத்தை ஆதரித்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம்: எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

திருப்பதியில் கனமழை வெள்ளம்: நிலச்சரிவு அபாயம்: தேவஸ்தான ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments