Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை பாராட்டிய ராதாரவி

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (15:17 IST)
கர்நாடகாவிலும் ஊழல் இருக்கிறது என நிரூபித்து குழப்பத்தை ஏற்படுத்திய சசிகலாவை பாராட்டுகிறேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.


 

 
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
 
இதையடுத்து சசிகலா சிறையில் சகல வசதிகளுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் ராதாரவி சசிகலாவை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஜனநாயகத்தில் வாக்களிப்பவர்கள் அரசை விமர்சிக்க உரிமை உண்டு. ரஜினிகாந்த் விமர்சிக்கும் போது மவுனமாக இருந்த அமைச்சர்கள், கமல்ஹாசனை விமர்சிப்பது முறையல்ல. கர்நாடகாவிலும் ஊழல் இருக்கிறது என நிரூபித்து குழப்பத்தை ஏற்படுத்திய சசிகலாவை பாராட்டுகிறேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments