Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப் கிடைச்சா நுழைய பாக்குறாங்க.. அது முடியாது! – ஆர்.பி.உதயகுமார் வார்னிங்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (10:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவிலை கிடைக்கும் இடைவெளியில் உள்ளே நுழைய சிலர் முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? சசிகலா அதிமுகவில் இணைவாரா? போன்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் உலா வர தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து அமமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சசிகலா விடுதலையாகி வந்ததும் அதிமுக – அமமுகவை இணைப்பார் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அமமுக வட்டாரத்தில் பலத்தரப்பட்ட தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசிய அமைச்சர் ஆர்பி உதயகுமார் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் யார் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய அவர் “அதிமுகவில் இடைவெளி உருவானால் உள்ளே புகுந்து விடலாம் என சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் நிறைவேறாது. “ஊரெங்கும் ஒரே பேச்சு, 2021ல் அதிமுக ஆட்சி” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனா! இந்தியாவுக்கு தொல்லை தர புதிய ப்ளான்?

மன்மோகன் சிங் மறைவு எதிரொலி: இன்று அதிமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து..!

13000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒப்பந்த தொழிலாளி.. ரூ.21 கோடி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம்..!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments