காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறை: தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:36 IST)
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாள் விடுமுறை வருவதை அடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
செப். 26 (வெள்ளிக் கிழமை) செப். 27 (சனிக்கிழமை) செப். 28 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப். 29 மற்றும் செப். 30 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 790 பேருந்துகளும் 27/09/2025 (சனிக்கிழமை) 565 பேருந்துகளும் 29/09/2025 (திங்கள்கிழமை) 190 பேருந்துகளும் மற்றும் 30/09/2025 (செவ்வாய்கிழமை) அன்று 885 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 26/09/2025 மற்றும் 27/09/2025 ஆகிய நாள்களில் 215 பேருந்துகளும் 29/09/2025 மற்றும் 30/09/2025 ஆகிய நாள்களில் 185 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு  பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 26/09/2025 மற்றும் 27/09/2025 ஆகிய நாள்களில் 145 பேருந்துகளும் 29/09/2025 மற்றும் 30/09/2025 ஆகிய நாள்களில் 105 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
 
மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப 04/10/2025 முதல் 05/10/2025 வரை அனைத்து இடங்களிலிருந்தும்  சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments