Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு - அதிரடி காட்டும் முதல்வர்!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (15:31 IST)
அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் அரிசி அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
 
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எடை குறைவாகவும் பாக்கெட் பாதிப்படைந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறைகள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments