Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாத பௌர்ணமி; சதுரகிரி செல்ல அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:33 IST)
புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மாதத்தில் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷம் வருவதால் ஏராளமான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோவில் சென்று வழிபட பக்தர்களுக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலையேறி செல்லும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் கோவிலில் தங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு மலை ஏற காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments