Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் ; ரூ.10 லட்சம் அபேஸ் : திருமணமான புனே வாலிபர் கைது

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (15:12 IST)
சென்னையில் வசித்துவரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் நம்பவைத்து, அவரை அனுபவித்ததோடு, அவரிடமிருந்து பணத்தையும் மோசடி செய்த புனே வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
சென்னையை கிண்டிக்கு அருகேயுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசித்தும் ஒரு பெண்ணுக்கும்(34), மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(38) இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். 
 
அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தை கூறிய சிவாஜி, தனது ஆசைக்கு பலமுறை இணங்க செய்துள்ளார்.  அதன்பின், தான் தனியாக தொழில் துவங்குவதாக கூறி அப்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை கறந்துள்ளார். அதன்பின், அப்பென்ணை அவர் தொடர்பு கொள்ளவில்லை. முகநூல் தொடர்பையும் துண்டித்துவிட்டார். இதனால், அவரது சொந்த ஊரான புனேவிற்கு சென்று அந்த பெண் விசாரித்த போது, சிவாஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து, நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், தனிப்படை புனேவுக்கு சென்று சிவாஜியை கைது செய்து சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல் வேறு யாரையவது அவர் ஏமாற்றியுள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments