Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னையன் உயிருக்கு ஆபத்து!? – எச்சரிக்கும் புகழேந்தி!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (15:18 IST)
பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவை தொடர்ந்து புகழேந்தி அவரது உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றும் அதிமுக தலைமைக்கு வர கேபி முனுசாமி பணம் கொடுத்து முயற்சி மேற் கொண்டதாகவும் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது 

அந்த ஆடியோவில் உள்ளது தனது குரல் இல்லை என பொன்னையன் கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் பேசியது பொன்னையன்தான் என நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி “பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம். நான்கு ஆண்டுகளாக நடந்த பணக் கொள்ளையையும், சாதி வெறியையும் கூறிவிட்டார். பொன்னையன் வாழ்க! எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து என்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு தேவை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்ப அம்பேத்கர் பெயர் மடைமாற்றம்: சரத்குமார்

இன்று ஒரே நாளில் 520 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக மாறி மாறி போராட்டம்: பெரும் பரபரப்பு..!

ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை: விடுமுறை இல்லாததால் மாணவர்கள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments