Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது: வேங்கை வயல் மக்கள் மனு..!

Mahendran
திங்கள், 27 ஜனவரி 2025 (12:59 IST)
சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என வேங்கை வயல் மக்கள் சார்பில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியில், கடந்த 2022 ஆம் ஆண்டு மனித கழிவுகள் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் சார்பில் விசாரித்து வரும் நிலையில், கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் தான் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என்றும், பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்  குற்றவாளிகள் என்றும் கூறியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல அரசியல் கட்சிகளும் இந்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என போராட்டம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயல் மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்றே விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments