குறுக்குசந்து உட்பட அனைத்தையும் மூடியது புதுச்சேரி! - தீவிர கண்காணிப்பு!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (12:07 IST)
புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக – புதுச்சேரி இடையேயான முக்கிய போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு முதலாவதாக பலியாகியுள்ளார்.

அதை தொடர்ந்து புதுச்சேரி அரசு பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக – புதுச்சேரி எல்லைகள் இடையே உள்ள ஒற்றையடி பாதை, கப்பி சாலை, குறுக்கு சந்து உள்ளிட்ட 26 சிறுவழிப்பாதைகளையும் மூடி காவல் ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு. தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழையாமல் இருக்க நான்கு பக்கங்களிலும் பலத்த காவல் கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments