Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானம் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது! – போலீஸார் எச்சரிக்கை!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (14:31 IST)
தமிழக, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மதுபானம் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என புதுச்சேரி போலீஸ் எச்சரித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுபானங்களை கடத்துவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க புதுச்சேரி போலீஸார் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

அதன்படி, புதுச்சேரியில் மதுபானக்கடைகளில் ஒரு நபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி மற்றும் 4 லிட்டர் சாராயம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைது மற்றும் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.. என்ன காரணம்?

முதலாளிகள் மீது வன்மமா? திட்டுவதற்காக புதிய சேவை அறிமுகம்! - எப்படியெல்லாம் பண்றாங்க!?

3 நாட்களில் 1500 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உச்சத்திற்கு செல்லும் என தகவல்..!

டிபன் பாக்ஸை கொடுத்து 10 வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்! - அரியலூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments