தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

Mahendran
சனி, 6 டிசம்பர் 2025 (16:48 IST)
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்திற்காக பல கடுமையான கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு விதித்துள்ளது.
 
கூட்டத்தில் அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
 
கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருபவர்கள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, QR குறியீடு முறையை பயன்படுத்தி மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
 
ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 
கட்சித் தலைவர் விஜய் வருகை தரும் சரியான நேரத்தை காவல்துறையிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
 
இந்த நிபந்தனைகள் அனைத்தும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விதிக்கப்பட்டுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments