புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்..! மூதாட்டி கைது.! மேலும் இருவருக்கு வலைவீச்சு..!!

Senthil Velan
வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:23 IST)
சீர்காழி அருகே திருமுல்லை வாசலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வெளி மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
 
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் ,சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர்  செல்வி, தலைமையில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர்   மணிகண்டகணேஷ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் திருமுல்லைவாசல் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
 
அப்பொழுது திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகர்  பகுதியை சேர்ந்த காந்திமதி(50) என்பவர்  புதுச்சேரி மாநில 800 மது பாட்டில்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை  கண்டுபிடித்தனர்.

ALSO READ: ஓபிஎஸ்-க்கு தொடர்ந்து பின்னடைவு! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ! உச்சநீதிமன்ற உத்தரவு.!!
 
மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து மது விற்பனையில் ஈடுபட்ட காந்திமதியை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments