Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (12:52 IST)
புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை 31ந் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்குகிறது, இதனிடையே புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநராக கைலாசநாதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டு இருந்த நிலையில் ஆளுநர் உரையை சி.பி.ராதாகிஷ்ணனா?? அல்லது கைலாசநாதன்?? வாசிப்பாரா என் கேள்வி  எழுந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பேரவையில் தமிழில் ஆளுநர் உரையை ஆற்ற உள்ளர்.
 
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 32 ஆளுநர்கள் பணியாற்றிய நிலையில் அனைவருமே ஆங்கிலத்தில் தான் ஆளுநர் உரையாற்றி வந்த நிலையில் கடந்த 2021, பிப்ரவரி முதல் 2024 மார்ச் வரை புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் முதல் முறையாக புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை தமிழில்  மூன்று முறை வாசித்துள்ளார்,  அவரைத் தொடர்ந்து பல மாநிலங்களில் ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக புதுச்சேரி பேரவையில் தமிழில் உரையாற்றவுள்ளார் மேலும் புதுச்சேரி சட்டப்பேரவையில்  2-வாது ஆளுநர் தமிழில் உரையாற்ற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்று ஆளுநர் உரை முடிந்த பின்னர் இரவு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது தொடர்ந்து  ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தும் பின்னர் 2-ஆம் தேதி நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இதனிடையே மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணித்தது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments