Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி

கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (14:21 IST)
புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
 

 
மே 16 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அங்கு அமைய உள்ளது.
 
இதனையடுத்து, புதுச்சேரி முதல்வராக, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை நேரில் சந்தித்து நாராயணசாமி ஆசி பெற்றார். மேலும், திமுக ஆதரவு கடிதத்தையையும் பெற்றார். அப்போது திமுக எம்பி கனிமொழி உடனிருந்தார்.
 
பின்பு, நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
 
மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். இந்தியாவிலேயே புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டுவோம் என்றார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments